பாகல்பட்டி ஸ்ரீ கெங்கம்மாள் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் தரிசனம்

பாகல்பட்டி ஸ்ரீ கெங்கம்மாள் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் தரிசனம்

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி 

பாகல்பட்டி ஸ்ரீ கெங்கம்மாள் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பாகல்பட்டி அருள்மிகு ஸ்ரீ கெங்கம்மாள் திருக்கோவில் வைகாசி திருவிழா கடந்த 14ஆம் தேதியன்று பூச்சாற்றுதலுடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னதாக வீரகாசி வேடமணிந்த 2பேர் நாக்கில் சூடம் கொளுத்தி கெங்கம்மாள் சுவாமிக்கு தீபாராதனை காண்பித்தும், வீர வாலில் நுனியில் அரிசி நிரப்பப்பட்ட சொம்பை தொங்கவிட்டும், தூக்கி வீசப்படும் தேங்காய்களை கத்தியால் சரிபாதியாக உடைத்தும் பக்தர்களை பரவசப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் தலைவர் அமிர்தலிங்கம்,துணைத்தலைவர் வெங்கடேசன், செயலாளர் ராஜேந்திரன், இணைச்செயலாளர் பாஸ்கர், பொருளாளர் தேவராஜன், துணைப் பொருளாளர் லோகநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story