பாகாயம், ஓட்டேரி பகுதிகளில் கலெக்டர் சுப்புலெட்சுமி ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலத்துக்குட்பட்ட 53 மற்றும் 57-வது வார்டு பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலத்துக்குட்பட்ட 53 மற்றும் 57-வது வார்டு பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள சிவில் சப்ளை குடோன் தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு கான்கிரீட் சாலையை பார்வையிட்டார். தொடர்ந்து ஓட்டேரி ஏரி மற்றும் அங்குள்ள சிறுவர் பூங்காவினை ஆய்வு செய்தார். ஓட்டேரி ஏரியை ஆழப்படுத்தி நீர் தேக்கி வைத்திடவும், பூங்காவினை மேம்படுத்த தற்போது தயாரிக்கப்பட்டு வரும் திட்ட அறிக்கையினை விரைந்து முடித்து பணியினை துரிதமாக மேற்கொள்ளவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அங்கு 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஓட்டேரி கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சின்ன குளவிமேடு 1-ல் உள்ள 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்வது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Next Story