பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் பிரச்சாரம்

பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் பிரச்சாரம்
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் இளங்கோவன் பெரம்பலூர் நகர் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருச்சி சேர்ந்த இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் பெரம்பலூர் நகர் புதிய பேருந்து நிலையம் பாலக்கரை வெங்கடேசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பெரம்பலூருக்கு தேவையான அடிப்படை பிரச்சினைகளை எடுத்துரைத்து இவைகள் அனைத்தையும் சரி செய்யப்படும் என தெரிவித்து தங்களது சின்னமான யானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இது குறித்த துண்டு அறிக்கையையும் பொதுமக்களிடம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் காமராசு உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story