தூண்டில் வளைவு, மீன் வலை பின்னும் கூடம் - துவக்கி வைத்த முதல்வர்
திறப்பு விழா
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு மற்றும் மீன் வலை பின்னும் கூடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக மீனவர் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
நபார்டு வங்கி நிதி ரூ.50 கோடி மதிப்பில் மண்டபம் தென் கடற்பகுதியில் மீன் வலை பின்னும் கூடம், பேரிடர் காலங்களில் படகுகள் சேதமாவதை தடுத்த கடலரிப்பு தடுப்புச் சுவர் தூண்டில் வளைவு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இதன் மூலம் மண்டபம் பகுதியில் 195 விசைப்படகுகள், 250 நாட்டுப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தலாம். இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மீனவர் பயன்பாட்டுக்கு நேற்று அர்ப்பணித்தார்.
இதன் தொடர்ச்சியாக மண்டபத்தில் நடந்த நிகழ்வில் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ., குத்து விளக்கேற்றி வைத்து மீனவர்களுடன் பார்வையிட்டார். விழாவில் பேரூராட்சி தலைவர் ராஜா, செயல் அலுவலர் இளவரசி, மீன் வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார், கவுன்சிலர்கள் சம்பத் ராஜா, வாசிம் அக்ரம், சாதிக் பாட்ஷா, இளநிலை உதவியாளர் முனியசாமி, பொறியாளர் பாலசுப்பிரமணியன், மீனவர் சங்கப்பிரதிநிதிகள் பாலசுப்ரமணியன், ஜாகீர் உசேன், அப்துல், செல்வக்குமார் சுல்தான், சீனி குப்பை, பக்கர், சர்புதீன், பேரூர் திமுக செயலர் ரஹ்மான் மரைக்காயர் உள்பட பலர் பங்கேற்றனர்.