பேக்கரி ஊழியர் தற்கொலை
தற்கொலை
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சின்னப்ப நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகன் இளங்கோ (வயது 23). இவர் நாகியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு பேக்கரியில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் வேலைக்கு வந்த அவர் சற்று கவலையுடன் இருந்துள்ளார்.
இது குறித்து கடை உரிமையாளர் கேட்டதற்கு, வீட்டில் சிறிய பிரச்சினை ரொம்ப மன அழுத்தமாக உள்ளது என கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் கடையின் அருகில் உள்ள கழிவறைக்கு சென்று அங்குள்ள விட்டத்தில் சிறிய கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சக ஊழியர்கள் வெளியில் சென்றவரை காணவில்லை என்று பார்க்கும் போது கழிவறையில் பிணமாக தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.