ஊத்தங்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை

ஊத்தங்கரையில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த பண்டிகையை ஹச் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தங்களது வீடுகளில் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஊத்தங்கரையில் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

1,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒன்றுகூடி முக்கிய வீதி மற்றும் சாலை வழியாக நடந்து சென்று ஊத்தங்கரை வெளி விளையாட்டு மைதானத்திற்கு எதிரே உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். ஜமாத்தின் முத்தவல்லி சுன்னத் ஜமாத் தலைமையில் நடந்த சிறப்பு தொழுகையில் செயலாளர் சாகுல் ஹமீத், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, அலினா சில்க்ஸ் உரிமையாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story