பக்ரித் பண்டிகை : சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் களைகட்டிய விற்பனை

பக்ரித் பண்டிகை : சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் களைகட்டிய விற்பனை

ஆட்டுச்சந்தையில் குவிந்த மக்கள்

சிறுவாச்சூர் ஆட்டுச் சந்தையில் பக்ரித் பண்டிகையை யொட்டி ஆடு விற்பனை களைகட்டியது.
பக்ரீத் பண்டிகை வருகின்ற திங்கட்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஆட்டுச்சந்தையில் வியாபாரம் களைகட்டி காணப்படுகிறது. அதன்படி, பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆட்டு விற்பனை சந்தையில் விடிய விடிய ஆடு விற்பனை நடைபெற்றது இந்த ஆட்டுச் சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு விற்பதற்காகவும் வாங்குவதற்காகவும் ஆடு விற்பவர்கள் ஆடு வாங்கும் வியாபாரிகள் வருகை தந்திருந்தனர். பக்ரீத் பண்டிகை முன்னிட்டு விற்பனைக்காக ஆடுவாங்க குவிந்த வியாபாரிகள் சுமார் ரூ.8000லிருந்து ரூபாய் ரூ.20000 வரை எடை மதிப்பிற்கு ஏற்ப ஆடுகள் விற்கப்பட்டதாக தெரிவித்தனர் சுமார் 5,000 மேற்பட்ட ஆடுகள் விற்கப்பட்டது என்று கூறப்படுகிறது

Tags

Next Story