தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் பாலாலயம்

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில்  பாலாலயம்
X

பாலாலயம் நிகழ்ச்சி

தென்காசியில் அருள்தரும் உலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் ராஜகோபுரம், விமான பாலாலயம் நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 17ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அடுத்த கும்பாபிஷேக பணிக்கான பாலாலயம் நேற்று முன்தினம் பூஜைகளுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்சகவ்யம், 2ஆம் கால யாகசாலை பூஜை, தேவ பாராயணம், திருமுறை பாராயணம் நடைபெற்றது. தொடா்ந்து புனித நீா் உள்பிரகாரத்தில் பவனியாக எடுத்துவரப்பட்டு , அருள்தரும் ஸ்ரீ உலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் விமானங்கள் ராஜகோபுரத்துக்கு பாலாலயமும், தீபாராதனையும் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் முருகன் தலைமையில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

Tags

Next Story