உப்புவேலூரில் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா

உப்புவேலூரில் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா

கோவில் கும்பாபிஷேகம்

உப்புவேலூர் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த உப்புவேலூர் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி முதல் மங்கள இசை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டியாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு ராஜகோபுர கலசங்களுக்கும், அதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பா பிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழா விற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story