பல்லாரி வெங்காயம் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

பல்லாரி வெங்காயம் விலை உயர்வு;  விவசாயிகள் மகிழ்ச்சி

  ஆலங்குளத்தில் பல்லாரி வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆலங்குளத்தில் பல்லாரி வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், சுரண்டை, பாவூர்சத்திரம், இலத்தூர், அச்சன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்லாரி வெங்காயம் அதிகளவு விவசாயிகள் பயிரிட்டு வந்த நிலையில் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ பல்லாரி ரூ.20 க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 16-ம் தேதி ஒரு கிலோ பல்லாரி ரூ.30 க்கு விற்பனை ஆவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags

Read MoreRead Less
Next Story