கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்கு பெட்டிகள் பயணம்

கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்கு பெட்டிகள் பயணம்

வாக்கு இயந்திரம் அனுப்பி வைப்பு

கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்கு பெட்டிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் அனுப்பப்பட்டது.

கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்கு பெட்டிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் அனுப்பப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு பெட்டிகள் மாவட்ட ஆட்சியர்,

முன்னிலையில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் அனுப்பப்பட்டது. தமிழக முழுவதும் மக்களவைத் தேர்தல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உட்பட 27 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 1,888 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு மொத்தம் 4,534 பேலட் யூனிட், 2067 கண்ட்ரோல் யூனிட் மற்றும் 2045 வி வி பேட் ஆகியவை பிரிக்கப்பட்டு அந்தந்த மையங்களுக்கு அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டது. இதனை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பின்னா..சரயு நேரில் பார்வை இட்டு ஆய்வு செய்தார். அப்போது நாடாளுமன்றத் தேர்தலையொட்டி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 3, 772 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும், 208 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு அந்த மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்புடன் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது., மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சரயு கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story