மணிமுத்தாறு அருவியில் மூன்றாவது நாளாக தடை
மணிமுத்தாறு அருவி
மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மாஞ்சோலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவிக்கு வரும் தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மூன்றாவது நாளாக இன்று (மே 26) மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story