சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

சதுரகிரிக்கு செல்ல தடை 

கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய ஜுன் 4,5, 6, 7, ஆகிய நான்கு நாட்கள் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் ,மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் அனுமதி அளித்திருந்த நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருவதாலும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஜூன் 4 ந் தேதி முதல் 7 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும் அன்றைய தினம் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினசாி மழையளவு மற்றும் ஆற்றுப்பகுதிகளில் தண்ணீா் வரத்தினை பொறுத்து பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் வனத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story