கேரள கோயில்களில் அரளி பூக்களுக்கு தடை? குமரி விவசாயிகள் கவலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி காலத்தில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு பூக்கள் வழங்க வேண்டி தோவாளையில் பூத்தோட்டங்களும் பின்னர் பூ மார்க்கெட்டுகளும் உருவாக்கப்பட்டது. இந்த மார்க்கெட் இன்று கேரளாவுக்கும் குமரி மாவட்டத்திற்கும் பூக்கள் விநியோகம் செய்கின்ற பிரதான மையமாக தோவாளை மலச்சந்தை வழங்குகிறது.
இதனை நம்பி பல ஆயிரக்கணக்கான விவசாயிகளும் வியாபாரிகளும் தொழில் செய்து வருகின்றனர். தோவாளை சுற்றுவட்டார பகுதிகளில் அரளி பூக்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஏராளம் பேர் உள்ளனர். அரளி கோயில்களுக்காக மட்டுமே பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை பெண்கள் தலையில் சூடுவதோ சென்ட் தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்ட வேறு வாசனை பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவது இல்லை. சீசன் இல்லாத காலங்களிலும் கிலோ ரூபாய் 60 வரை அரளிப்பூ விற்பனையாகும்.
இந்த நிலையில் கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரளி பூவை கோயிலில் வைத்து சூர்யா என்ற இளம் பெண் கோவிலில் வைத்து எதேர்ச்சையாக உட்கொண்டதால் அவர் மரணம் அடைந்தார். இதனால் கேரளாவில் கோயில்களில் அரளி பூக்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் அது குமரி மாவட்டத்தில் அரளிப்பூ சாகுபடி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.