முதல்வர் வருகையொட்டி ட்ரோன் கேமரா பறக்க தடை

முதல்வர் வருகையொட்டி ட்ரோன் கேமரா பறக்க தடை

பைல் படம்

மதுரையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் வருகையொட்டி ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் வருகையொட்டி ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மதுரை வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம், அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஹோட்டல் மாரியாட், வண்டியூர் டோல் பிளாசா, பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாநகர, மாவட்ட எல்லைக்குள் 08.04.2024 மற்றும் 09.04.2024 ஆகிய நாட்களில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்படுகிறது.

எனவே, 08.04.2024 மற்றும் 09.04.2024 ஆகிய நாட்களில் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story