கன்னியாகுமரி கடல் பகுதியில் நாளை மீன் பிடிக்க தடை

கன்னியாகுமரி கடல் பகுதியில் நாளை மீன் பிடிக்க தடை

கன்னியாகுமரி

பிரதமர் வருகை எதிரொலியால் கன்னியாகுமரி கடல் பகுதியில் நாளை மீன் பிடிக்க தடை.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகிறார். அவர் வருகை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு நாளை பிற்பகல் 2 மணி வரை போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியில் மீனவர்கள் நாளை பிற்பகல் 2 மணி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், புதுக்கிராமம் உள்ளிட்ட ஏழு கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நாளை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாம நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளம் மற்றும் படகுகள் கடற்கரையில் வரிசையாக நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story