தென்காசியில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியர் உத்தரவு

தென்காசியில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியர் உத்தரவு

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் முடிவடையும் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை என ஆட்சியர் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடையும் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கொடிக் குறிச்சி யூ. எஸ். பி. கல்லூரி குழும வளாகத்திலிருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், வாக்குப்பதிவு ட்ரோன்கள் ஆளில்லாத விமானங்கள் தடைவிதிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஏ. கே. கமல்கிஷோர் தெரி வித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024, தென்காசி(தனி) நாடாளு மன்றத் தொகுதிக்கான தேர்தல் கடந்த 19. 04. 2024 (வெள்ளிக் கிழமை) ஆம்தேதி நடைபெற்று வாக்குப்பதிவிற்குப் பயன் படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மைய மான கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி குழுமம் வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேற்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி குழுமம் வளாகத்திலிருந்து 2 கிலோமீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மேற்படி பகுதியில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடையும் ஆளில்லாத விமானம் (Remotely Piloted Aircraft System- RPAS) பறக்க தடை விதிக்கப்படுகிறதுஎன மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஏ. கே. கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story