செண்பகத்தோப்பு மற்றும் ராக்காச்சி அம்மன் கோவிலுக்கு செல்ல தடை

செண்பகத்தோப்பு மற்றும் ராக்காச்சி அம்மன் கோவிலுக்கு செல்ல தடை
வெள்ளப்பெருக்கு
காட்டாற்று வெள்ளம் காரணமாக செண்பகத்தோப்பு மற்றும் ராக்காச்சி அம்மன் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஸ்தலங்களான செண்பகத்தோப்பு மற்றும் ராக்கச்சி அம்மன் கோவில் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு காரணமாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி எனது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் செண்பகத் தோப்பு வாக்காச்சி அம்மன் கோவில் மற்றும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளிட்ட சுற்றுலா ஸ்தலங்கள் அமைந்துள்ளன. விடுமுறை தினங்களில் இப்பகுதிகளுக்கு உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக வனப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் இங்கு உள்ள சிறு சிறு அருவிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் ஊர்வாசிகள் மேற்கண்ட இடங்களுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளில் யாரேனும் நுழைந்து உள்ளார்களா என வனத்துறையினருடன் காவல்துறையினரும் இணைந்து ரோந்து சுற்றி வருகின்றனர் அவ்வாறு இருக்கும் நபர்களை தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர் நாளை மறுநாள்( செவ்வாய்க்கிழமை 21 ஆம்தேதி)வரை தடை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story