கோட்டக்குப்பத்தில் புத்தாண்டையொட்டி இசை, நடன நிகழ்ச்சிக்கு தடை

கோட்டக்குப்பத்தில் புத்தாண்டையொட்டி இசை, நடன நிகழ்ச்சிக்கு தடை
கோட்டக்குப்பம் பகுதி ஓட்டல்களில் புத்தாண்டையொட்டி இசை, நடன நிகழ்ச்சிக்கு தடை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி எசரிக்கை
கோட்டக்குப்பத்தில் புத்தாண்டையொட்டி இசை, நடன நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சர்வதேச நகரமான ஆரோவில் மற்றும் கோட்டகுப்பம் இ. சி.ஆர், தந்திராயன்குப்பம், சின்னகோட்டக்குப்பம், முத லியார்சாவடி, பொம்மையார்பாளையம், கீழ்புத்துப் பட்டு, மஞ்சக்குப்பம் ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற் பட்ட விடுதி, கெஸ்ட்ஹவுஸ், ரிசார்ட் மற்றும் நட்சத்திர அந்தஸ்திலான ஓட்டல்கள் உள்ளது.

ஆங்கில புத்தாண்டை யொட்டி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு அறை எடுத்து தங்கி புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம். வருகிற 31-ந்தேதி இரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுவதற்கு கோட்டகுப்பம் சுற்று வட்டார பகுதி களில் உள்ள கெஸ்ட் ஹவுஸ் மற்றும் ரிசார்டுகளில் அறைகளில் தங்குவதற்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

புத்தாண்டையொட்டி எந்த விதமான அசம்பாவிதங் களும் நடைபெறாமல் இருக்க கெஸ்ட் ஹவுஸ் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்களுடன் கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. புத்தாண்டுகொண்டாட்டத்தின் போது கெஸ்ட் ஹவுஸ் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் கடை பிடிக்க வேண்டிய வழிமுறை கள் குறித்து பேசினர். அதில், வருவாய்த்துறை அனுமதி இன்றி கெஸ்ட் ஹவுஸ் இயங்கினால் பூட்டி சீல் வைக்கப் படும்.

எனவும் அறை எடுத்து தங்கும் போது அவர்களுடைய அடையாள அட்டையை சரி பார்த்து வழங்க வேண்டும். தனியாக வரும் 18 வயது கீழ் நிரம்பியவர்களுக்கு அறை கொடுக்கக் கூடாது. அத்து டன் இளம் பெண்களை கு கும்ப லாக அழைத்து வரும் ஆண்க ளுக்கு அறை வழங்கக்கூடாது எனவும் அந்நிய மாநில மதுபானங் களை அறைக்குள் கட்டாயம் அனுமதிக்க கூடாது. கடற்கரையில் கூடும் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க கூடாது என கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர்கள் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். அனைத்து தங்கும் விடுதிகளி லும் கட்டாயம் சி.சி.டி.வி. கேமரா பொறுத்திருக்க வேண்டும்.

புத்தாண்டை யொட்டி இசை மற்றும் நடன நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. மீறி நடத்துபவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தபட்டது

Tags

Next Story