பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிப்பு !

பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிப்பு !

கலெக்டர் பிருந்தாதேவி

ஏற்காட்டில், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு தடை வியாபாரிகள் ஒத்துழைப்பு தர கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலம் ஏற்காடு. இங்குள்ள மலை பகுதிகளில் சுற்றுசூழல், சுகாதாரத்தை மேம்படுத்தவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடுகளை தவிர்க்கவும், மாற்றுப்பொருட்களின் பயன்பாட்டினை அதிகரிக்கவும், திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி ‘பசுமை ஏற்காடு' என்ற திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வரப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த சுற்றுலாப்பயணிகள் கூடும் இடங்கள், உணவு விடுதிகளில் உருவாகும் குப்பைகளை மேலாண்மை செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டது. மேலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடுகளை முற்றிலும் தடைசெய்தல், அதற்கான மாற்று பொருட்களான மஞ்சப்பை உள்ளிட்டவைகளின் பயன்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டங்களில் மேற்கொண்ட முடிவுகளின் அடிப்படையில் ஏற்காட்டில் சுற்றுச்சூழலை பாதிக்கும் ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டி பைகள் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் இதர கடை உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மஞ்சப்பை உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத துணிப்பைகளை பயன்படுத்தி பிளாஸ்டிக் பைகள் பயன்பாடற்ற பசுமையான ஏற்காட்டினை உருவாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story