லாலாபேட்டை வாழைத்தார் மண்டியில் விற்பனை அமோகம்.
. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளான பிள்ளாபாளையம், வல்லம், கொம்பாடி பட்டி,வீரவல்லி, வீரக்குமரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைபுத்தூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக தங்கள் விளைநிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். பருவத்திற்கு வந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது வாழைத்தார் வரத்து குறைந்துள்ளதால், கடந்த இரண்டு வாரங்களாக வாழைத்தார் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் தார் ஒன்றுக்கு 400 ரூபாயும், ரஸ்தாலி தார் ஒன்றுக்கு 450 ரூபாயும், கற்பூரவள்ளி தார் ஒன்றுக்கு 300 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஏல மண்டியில் நடைபெற்ற ஏலத்தில், உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொண்டு வாழைத்தார்களை போட்டி போட்டு வாங்கியதால் விலை அதிகரித்தது.