கேரளாவில் ஏத்தன் வாழைத்தாருக்கு தட்டுப்பாடு :விவசாயிகள் கவலை

கேரளாவில் ஏத்தன் வாழைத்தாருக்கு தட்டுப்பாடு :விவசாயிகள் கவலை

வாழை

தூத்துக்குடி அருகே சுமார் 1000 ஏக்கரில் ஏத்தன் வாழைத்தார் பயிரிடப்பட்டுள்ள நிலையில் விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, குலையன்கரிசல், காலங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கேரளாவிற்கு சிப்ஸ்ஸிற்க்கா அதிக அளவு ஏற்றுமதி செய்யக்கூடிய ஏத்தன், நேந்திரம் பழ வாழைத்தார் விவசாயம் அதிக அளவு நடைபெறும் சுமார் 1000 ஏக்கரில் இந்தப் பகுதியில் விவசாயிகள் நேந்திரம் வாழைத்தாரை விவசாயம் செய்வர் இந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பின் காரணமாக வாழைபயிர் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் ஏற்கனவே வாழை விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மீதம் பயிரிடப்பட்ட வாழைத்தார்கள் தண்ணீர் தேங்கியதால் வாழைத்தாரின் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது. ஒரு வாழைத்தாரில் சுமார் 100 காய்கள் வரவேண்டிய இடத்தில் 50 காய்கள் மற்றும் 30 காய்களே விளைச்சல் ஆனது இதன் காரணமாக சீசன் துவங்கிய நேரத்தில் கேரள வியாபாரிகள் கிலோ 20 ரூபாய் வரை எடுத்த நிலையில் தற்போது கேரளாவில் ஏத்தன் தாருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தற்போது களியக்காவிளை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக கேரளா வியாபாரிகள் அத்திமரப்பட்டி பகுதியில் வந்து அதிக விலைக்கு கிலோ 45 முதல் 50 ரூபாய் வரை விலை கொடுத்து வாழைத்தாரை வாங்கி செல்கின்றனர். ஆனால் விலை இருந்தும் விளைச்சல் குறைவாக இருப்பதால் தங்களுக்கு உரிய வருவாய் கிடைக்காமல் அதிக அளவு இந்த ஆண்டு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு வாழை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அப்பொழுதுதான் அடுத்த பருவத்திற்கு விவசாயம் செய்ய முடியும் என தெரிவித்தனர்.

Tags

Next Story