வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு: விவசாயி அதிர்ச்சி

X
வாழை மரம் வெட்டி சாய்ப்பு
இரணியல் அருகே 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர்.
இரணியல் அருகே உள்ள ஆலன்விளையை சேர்ந்தவர் ஜாண் சேவியர் ராஜ் (வயது67), முன்னாள் ராணுவ வீரர். இவர் ஆலன்விளையில் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் வாழை விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வாழை தோட்டத்தை பார்வையிட சென்ற போது இவரது வாழை தோட்டத்திலும், பக்கத்து தோட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவற்றை யாரோ மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர். இதுகுறித்து ஜாண் சேவியர் ராஜ் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் பேரில் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து வாழைகளை வெட்டி சாய்த்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags
Next Story
