கன மழையால் சேதமடைந்த வாழை மரங்கள்!

கன மழையால் சேதமடைந்த வாழை மரங்கள்!

வாழை மரங்கள் சேதம்

ஒடுகத்தூர் அருகே கனமழை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முடிந்து விழுந்து சேதமடைந்தது.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு பகுதியில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை நடவு செய்து வருகின்றனர்.அங்கிருந்து, சென்னை, வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர் போன்ற பெருநகரங்களில் உள்ள சந்தைகளுக்கு வாழை, வாழை தண்டு, வாழை இலை என அனைத்தும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இப்பகுதி விவசாயிகளின் வாழ்க்கையில் பெரிதும் கை கொடுப்பது இந்த வாழை விவசாயம் தான்.இந்நிலையில், ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக் காற்றுடன் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதன் காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமானது.இந்த வாழை மரங்களில் குலை தள்ளி இன்னும் ஒரு மாதத்திற்குள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பயிர்கள் சேதமானது விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

Tags

Next Story