திடீர் சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதம்

ஆத்தூர் அருகே திடீர் புயல் காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூக உள்ள கோனூர், சிந்தலகுண்டு, அனுமதராயன்கோட்டை, சாமியார் பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவு விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் தற்போது வாழை விவசாயம் செய்து வருகின்றனர். செவ்வாழை, ரஸ்தாலி, கற்பூரவள்ளி உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது.

வாழை‌ விவசாயம் கடந்த ஒரு வருட பயிராக உள்ளது. தற்போது போதிய கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில் குடும்பத்துடன் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட சூறாவளி காற்றால் சிந்தலகுண்டு பகுதியில் உள்ள முருகேசன் தோட்டத்தில் மட்டும் சுமார் 500 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.

Tags

Read MoreRead Less
Next Story