தென்காசியில் கட்டு கட்டாக பணம் - ரூ. 2.24 கோடி பறிமுதல்

தென்காசியில் கட்டு கட்டாக பணம் - ரூ. 2.24 கோடி பறிமுதல்

வாகன சோதனை

தென்காசியில் கட்டு கட்டாக பணம் ரூ. 2.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசிமாவட்டம் கடையநல்லூர் வட்டம் டிஎன் புதுக்குடி விலக்கில் இன்று நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் பாலுச்சாமி தலைமையில் அதிரடி வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அவ்வழியே செங்கோட்டையில் இருந்து புளியங்குடிக்கு வந்த டாடா டோயட்டா கார் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. வாகனத்தில் 7 பைகளில் தலா ரூ. 32 லட்சம் வீதம் ரூ. 2. 24 கோடி பணம் கட்டுக்கட்டாக் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு முறையான ஆவணங்கள் இல்லை. அருள் தாஸ் மகன் சந்திர சேகரன் ( 25) என்பவர் வாகனத்தை ஓட்டி வந்தார். இவர் தனியார் சோப்பு, பீடி நிறுவனத்தில் பணம் வசூலிப்பவராக பணியாற்றி வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2. 24 கோடி பணத்தை நிலையான கண்காணிப்பு குழுவினர் உதவி அலுவலரும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான அனிதா, தேர்தல் பிரிவு தாசில்தார் ரவி கணேஷ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். செங்கோட்டையில் இருந்து தென்காசி, அகரக்கட்டு. கடையநல்லூர், புளியங்குடி, நகரம், நடுவக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைப்பதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் பணம் கொண்டு செல்லப்பட்டது அதிகாரிகள் இடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள் ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story