பானி பூரியால் பறிபோன உயிர் - போலீசார் விசாரணை !

பானி பூரியால் பறிபோன உயிர் - போலீசார் விசாரணை !

பலி

நத்தம் அருகேயுள்ள அய்யனார்புரத்தை சேர்ந்த சிறுவன் தீராத வயிற்று வலியால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்த வெள்ளி என்பவரது மகன் வேலு (17). இவர் 10-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு விவசாய கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி இவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

உடன் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு இறந்து போனார். இது குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் உயிரிழந்த சிறுவனின் தந்தை தெரிவித்ததாவது : வேலு கடைசியாக பானி பூரி சாப்பிட்டு வந்ததால் வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து போலீஸார் அளித்த தகவலின்படி - உயிரிழப்பதற்கான காரணம் உடல்கூற் ஆய்வு அறிக்கை வந்தால் மட்டுமே முழுமையாக தகவல் அளிக்க முடியும் என தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story