பனிமய மாதா பேராலய திருவிழா : முன்னேற்பாடு பணிகள் தீவிரம் !

பனிமய மாதா பேராலய திருவிழா : முன்னேற்பாடு பணிகள் தீவிரம் !

 திருவிழா

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா : முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு விழா ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்வான அன்னையின் திருவுருவ பவனி ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இத்திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை-மாலை சிறப்பு திருப்பலி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் ஸ்டார்வின், உதவிப் பங்குத்தந்தை பாலன், களப்பணியாளர் தினகரன், பேராலய பணிக்குழுவினர், பக்த சபையினை செய்து வருகின்றனர். இத் திருவிழாவையொட்டி பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி, தூய்மைப் பணி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Tags

Next Story