வங்கியில் அடிக்கடி 'நெட்வொர்க் டவுண்' ஒரகடம் வாடிக்கையாளர்கள் தவிப்பு

வங்கியில் அடிக்கடி நெட்வொர்க் டவுண் ஒரகடம் வாடிக்கையாளர்கள் தவிப்பு

நெட்வேர்க் பிரச்சினையால் அவதி

ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் அடிக்கடி நெட்வொர்க் டவுண் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த, ஒரகடம் மேம்பாலம் அருகில், 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதியம் எடுக்க, நகை கடன், சேமிப்பு கணக்கில் பணம் செலுத்த எடுக்க உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக, சுற்றுவட்டாரத்தில் உள்ள, 15க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், வங்கியில் அடிக்கடி நெட்வொர்க் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனால், 10 கி.மீ., துாரத்திற்கும் அதிகமான தொலைவில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

நெட்வொர்க் கிடைக்காததால், நீண்டநேரமாக காத்திருக்க வேண்டியுள்ளதால், வயதானோர், பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், வங்கியில் போதிய ஊழியர்கள் இல்லாததால், பெருவாரியான நேரத்தை வங்கிகளிலேயே செலவிட நேரிடுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட வங்கி உயர் அதிகாரிகள், போதிய ஊழியர்களை நியமித்து, நெட்வொர்க் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாடிக்கைளார்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சில மாதங்களாக நெட்வொர்க் பிரச்னை நிலவி வருகிறது. வங்கி ஊழியர்கள் பற்றாக்குறைக்கு உயர் அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

Tags

Next Story