திருவண்ணாமலை மாவட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கடன் மேளா!

திருவண்ணாமலை மாவட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கடன் மேளா!

திருவண்ணாமலையில் கடன் மேளா

சிறப்பு அழைப்பாளராக சட்டபெரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி கலந்து கொண்டார்

திருவண்ணாமலை மாவட்டம்: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கடன் மேளா! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்திவருகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இன்றைக்கு 1503 பயனாளிக்கு ரூ.10.14 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோமாசிபாடியில் நேற்று கூட்டுறவு துறை சார்பில் நடந்த கடன்மேளா வழங்கும் விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத் தூர் ஒன்றியம் சோமாசிபாடியில் ஒரு தனியார் திருமண மஹாலில் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் கடன் மேளா வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு திரு வண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறு முகம் ஒன்றியக் குழு தலைவர் பூ.அய்யாகண்ணு வேளாண் அட்மா குழு தலைவர் ஆர்.சிவக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் டி.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் கா.ஜெயம் அனைவரையும்வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், புதிய சேமிப்பு கணக்கு புத்தகம் வழங்கியும் 1503 பயனாளிகளுக்கு ரூ.10.14கோடி மதிப்பில் மகளிர் சுயஉதவிக் குழுக் களுக்கு கடனுதவி களை வழங்கி விழா பேருரையாற்றுகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். எங்களுக்கு எடுத்துக்காட்டுதான் இன்றைக்கு 1503 பயனா ளிகளுக்கு ரூ.10 கோடியே 14 லட்சத்து 79 ஆயிரத்து 550 மதிப்பில் கடன் வழங்கப் பட்டுள்ளது. மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை நல்லமுறையில் பயன்படுத்தி பெண்கள் பொருளா தாரத்தில் முன்னேற வேண்டும். இந்தியாவிலேயே முதன்முறையாக விவ சாயிகளின் பயிர்கடன் ரத்து செய்தது கலைஞர் கருணாநிதிதான். அதன்பிறகு ரூ.7 ஆயிரம் கோடி கடன் ரத்து செய் தார். அதற்காகத்தான் அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்பட பெண்களுக்காகவே இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு மாதம் ரூ.1000 கல்லூரி பெண்களுக்கு மாதம் ரூ.1000வழங்கியும் செயல்படுத்தி வருகிறார் என்றார். இந்த விழாவில் மகளிர் சுயஉதவிக்குழு கடன், பயிர்கடன் கால்நடை வளர்ப்பு மூலதன கடன் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் மத்திய கால கடன் மகளிர் தொழில்முனை வோர் கடன் சிறுவணிக கடன் ஆதரவற்ற விதவை கடன் நாட்டுப்புற கலைஞர் களுக்கான கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செய லாட்சியர் சி.சுரேஷ்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஜி.பி.ஆனந்தி, உதவி பொது மேலாளர்கள் எல்.விஜய குமார், எஸ்.கணபதி, பி.கந்தசாமி தனலட்சுமி களமேலாளர் எஸ்.விஜயன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய உதவியாளர் ஏ.வெற்றிவேல், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் ஜி.குணசேகரன், பச்சை யப்பன், விஜயராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.குப்புசாமி, ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் எஸ்.ரேகா செந்தில்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் விவசாய சங்க பிரதிநி திகள் முக்கிய பிரமுகர்கள் கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் தே.சித்ரா நன்றி கூறினார்.

Tags

Next Story