694 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.36.21 கோடி வங்கி கடன்
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 694 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 6,305 பயனாளிகளுக்கு ரூ.36.219 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்களின் சார்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் – இந்நிகழ்வு பெரம்பலூர் மாவட்டத்தில் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது, இதனை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , மாவட்ட ஆட்சியர்.கற்பகம், தலைமையில் இன்று பார்வையிட்டு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 694 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 6,305 பயனாளிகளுக்கு ரூ.36.219 கோடி மதிப்பிலான வங்கிக்கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சியை போக்குவரத்துத்துறை அமைச்சர் , மாவட்ட ஆட்சித்தலைவர் சட்டமன்ற உறுப்பினர், ஆகியோர் பார்வையிட்டனர். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்வுகளில், நகர்மன்றத் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், பெரம்பலூர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் அருணாசலம், ஊராட்சி ஒன்றியக்குழுத்தவைலர்கள் பெரம்பலூர் மீனா அண்ணாதுரை, வேப்பந்தட்டை ராமலிங்கம் , வேப்பூர் பிரபா செல்லப்பிள்ளை , மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், டாக்டர் கருணாநிதி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story