விவசாய நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் வங்கிக்கடன்

விவசாய நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் வங்கிக்கடன்

 தாட்கோ மூலமாக மானியத்துடன் கூடிய குறைந்த வட்டியில் வங்கிக்கடன் பெற்று, விவசாய நிலம் வாங்கலாம் என மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தியுள்ளார். 

தாட்கோ மூலமாக மானியத்துடன் கூடிய குறைந்த வட்டியில் வங்கிக்கடன் பெற்று, விவசாய நிலம் வாங்கலாம் என மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினைச் சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரயத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்தவட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5,00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத் தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதிமேம்பாட்டுக் கழக நிதியிலிருந்து பயனாளிகளுக்கு 6% மிக குறைந்தவட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் (www.tahdco.com) என்ற இணயதள முகவரியில் விண்ணணப்பம் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலக நேரங்களில் நேரடியாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், 3வது தளம், கோரம்பள்ளம், தூத்துக்குடி- 628101 என்ற முகவரியிலோ அல்லது மாவட்ட மேலாளர் கைபேசி எண்: 9445029532-க்கு தொடர்பு கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,. தெரிவித்துள்ளார்.

Tags

Next Story