கழனிவாசல் கிராமத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சிறப்பு முகாம்
கிராமங்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை நேரில் சென்று புதிய வங்கிக் கணக்கு துவங்கவும், நிலுவையில் உள்ள கடன்களை வசூல் செய்யும் வகையில், பல்நோக்கு முகாம்களை நடத்த, வங்கியின் மண்டல அலுவலகம் உத்தரவின் படி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கழனிவாசல் கிராமத்தில், சேமிப்பு கணக்கு, நடப்புக் கணக்கு துவங்கவும், நிலுவையில் உள்ள கடன்களை வசூல் செய்யவும், கடன் வழங்கவும், சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், வங்கி மேலாளர் ஆஷிஷ் பானர்ஜி தலைமை வகித்தார். வங்கி அலுவலர் (பயிற்சி) வினோதினி, அலுவலக உதவியாளர் சிவகுமார், கிராம பிரமுகர்கள் ஏ.மார்க்கண்டன், ஆர்.பாண்டியன், ராஜா, பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், கணக்கு துவங்கவும், கடன் பெறவும், பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.