ஒரத்தூரில் சேதமடைந்த ஏரியின் கரை சீரமைப்பு

ஒரத்தூரில் சேதமடைந்த ஏரியின் கரை சீரமைப்பு

உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் 

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஒரத்தூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ஒரத்தூர் ஏரியின் குறுக்கே ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணி 3 ஆண்டு முன்பு தொடங்கியது. ஆனால் அந்த பணி இன்னும் முழுமையாக முடிவடையாமல் உள்ளது. இந்நிலையில் இந்த நீர்த்தேக்கம் பணியின் போது ஏரியில் உள்ள நீர் வெளியேறாமல் இருப்பதற்கு தற்காலிக கரை அமைக்கப்பட்டது. தற்போது பெய்த மழையில் நீர்த்தேக்கம் அருகே உள்ள தற்காலிக கரை உடைந்து மழைநீர் வீணாக வெளியேறியது. தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை வைத்து உடைந்த கரையை சீரமைத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'இந்த தற்காலிக கரை இதுவரை 5-வது முறையாக உடைந்துள்ளது. ஒவ்வொரு மழைகாலத்திலும் இந்த தற்காலிக கரை குறிப்பிட்ட இடத்திலேயே உடைந்து ஏரி நீர் முழுவதும் வெளியேறுகிறது. அப்படி வெளியேறி வரும்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டை அடுக்குவதும் வாடிக்கையாக உள்ளது. வருடம்தோறும் ஏரியில் இருந்து நீர் வெளியேறிய பிறகு மணல் அடுக்குவதால் எந்த நன்மையும் இல்லை. அரசு பணம்தான் வீன். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தற்காலிக கரை தொடர்ந்து ஒரே பகுதியில் உடைவது குறித்து அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தனர்."

Tags

Next Story