செய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் உண்டியல் திறப்பு விழா!

செய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் உண்டியல் திறப்பு விழா!

உண்டியல் திறப்பு விழா 

செய்துங்கநல்லூரில்  சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் கோயிலில் உண்டியல் திறப்பு விழா கோயில் வளாத்தில் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயம் மிகவும் பழமையானது. கல்வெட்டு மூலமாக சுமார் ஆயிரம் ஆண்டு பழமையானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் சிவராத்திரி, பிரதோசம், சஷ்டி உள்பட நிகழ்ச்சிகள் மிகப்பிரமாண்டமாக நடந்து வருகிறது. நிறுத்தப்பட்ட திருவாதிரை திருவிழா, மற்றும் திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடந்து வருகிறது.

இந்த ஆலயம் திருப்பணி இன்றி கிடந்தது. ஆன்மிக பேரரவை சார்பில் இந்த கோயில் திருப்பணி செய்யப்பட்டது. கொடிமரம் நிருவுதல், திருபள்ளி அறை உருவாக்குதல், 63 நாயன் மார்களை உருவாக்குதல் என பல்வேறு திருப்பணிகள் நடந்தது முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது இநத கோயிலில் புதிய உண்டியல் வைக்க ஏற்பாடு நடந்தது. புதிய உண்டியல் திறப்பு விழா கோயில் வளாத்தில் நடந்தது.

அறங்காவலர் குருமாரியப்பன் தலைமை வகித்து, முதல் காணிக்கையை வழங்கினார். இன்ஸ்பெக்டர் நம்பி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் முத்தாலங்குறிச்சி வீரபாண்டீஸ்வரர் அறங்காவலர் காமராசு, கோயில் அர்ச்கர் முத்துராமன், சிவனடிமை சுப்பிரமணியன், ரஜேஷ், முருகப்பெருமாள், அலுவலக ஊழியர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story