ஏடிஎம்மில் கரைபடிந்த ரூபாய் நோட்டுகள் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

ஏடிஎம்மில் கரைபடிந்த ரூபாய் நோட்டுகள் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

 கரைபடிந்த ரூபாய் நோட்டு

ஏடிஎம்மில் கரை படிந்த ரூபாய் நோட்டுகள் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
சிவகங்கை முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சிவகங்கை 48 காலணி செல்லும் வழியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் -ல் வீட்டுத் தேவைக்காக ரூ.10,000/ பணம் எடுத்துள்ளார். கைக்கு கிடைத்த பணத்தை எண்ணிப் பார்த்த போது அனைத்து ரூபாய் நோட்டுகளுமே(ரூ.500) கறை படிந்து அழுக்கான அவற்ற மாற்ற முடியாத நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவசரத் தேவைக்கு எடுத்த பணம் செலவழிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து வேதனை அடைந்த அவர், வாரச்சந்தை சாலையில் உள்ள முதன்மை வங்கிக்கு புகார் தெரிவிக்கச் சென்றார். ஆனால் ரமலான் விடுமுறை என்பதால் அங்கிருந்த காவலர் மறுநாள் வந்தால் மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறினார். ஆனால் வீட்டு வேலை பார்ப்பவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்பதால் அங்கேயே நின்று புலம்பிக் கொண்டிருந்தார். அப்போது வங்கியில் இருந்த அதிகாரி ஒருவர் வெளியில் வந்து அவரிடமிருந்த பழைய பணத்தாள்களை மாற்றிக் கொடுத்து அனுப்பி வைத்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் வெங்கடேஷ் கூறியது, வங்கி ஏடிஎம்ல் இது போன்ற பழைய பணத்தாள்களை வைத்து வாடிக்கையாளர்களை சிரமப்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவம் நடைபெறாத வகையில் வங்கி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்

Tags

Next Story