தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் - 25 பேருந்துகளில் அகற்றம்

தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் - 25 பேருந்துகளில் அகற்றம்

ஏர் ஹாரன் பறிமுதல் 

ஆரணியில் தடையை மீறி ஹர் ஹர்ன் பொருத்திய 25 பேருந்துகளில் அகற்றப்பட்டு பறிமுதல் செய்து ஆரணி வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலராக சரவணனும், ஆய்வாளராக முருகேசனும் பணிபுரிந்து வருகின்றனர். ஆரணி ,செய்யார், வந்தவாசி, சேத்பட் ,போளுர் உள்ளிட்ட ஆரணி வட்டார போக்குவரத்து உட்பிரிவில் உள்ள சுமார் 206 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. மேலும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் தடையை மீறி ஏர்ஹாரன் பொறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் அதிகாரிகள் ஆரணி பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 25 வாகனங்களில் பொருத்தபட்ட ஏர் ஹாரன்களை அகற்றி பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். சேலத்திலிருந்து காஞ்சிபுரத்திற்கு செல்லும் அரசு பேருந்து தடம் எண் : 438 கொண்ட பேருந்தில் உடைந்த கண்ணாடி வைத்து கொண்டு பேருந்தை இயக்கியது கண்டு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போக்குவரத்து பணிமனை அதிகாரியை தொடர்பு கொண்டு பேருந்தில் உடைந்த கண்ணாடியை வைத்து கொண்டு இயக்கினால் தகுதி சான்று ரத்து செய்யபடும் என்று வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் எச்சரிக்கை விடுத்தார். பின்னர் தனியார் பேருந்துகளில் சீருடை அணியாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்காத பேருந்துகளுக்கு சுமார் 10ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags

Next Story