தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை
தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை
நத்தம் அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அனேக இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து நத்தம் காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி மற்றும் தனிப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் சின்ன குமாரசாமி ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நத்தம் அவுட்டர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் 24 கிலோ எடையுள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். விற்பனை செய்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story