வடசேரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்.

வடசேரியில் தடை செய்யப்பட்ட  புகையிலை பறிமுதல்.

கோப்பு படம்


குமரி மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவில் தனிப்படை போலீசார் நேற்று வடசேரி, ஒழுகினசேரி பகுதியில் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது தெரிய வந்தது. அதில் இருந்து 360 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்க ளிடமிருந்து ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். தடை செய்யப்பட்ட புகையிலை கடத்தி வந்ததாக காட்டாதுறை பூவின்விளை பகுதியை சேர்ந்த ரத்தின குமார் (55), சேலம் மேட்டூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (28), சேலம் சங்ககிரி பகுதியை சேர்ந்த கண்ணன் (28) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ரத்தினகுமார், முருகேசன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தடை செய்யப் பட்ட புகையிலை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story