ஸ்ரீபெரும்புதுாரில் தொடரும் பேனர் கலாசாரம்

ஸ்ரீபெரும்புதுாரில் தொடரும் பேனர் கலாசாரம்

பேனர் கலாசாரம்

அனுமதியின்றி வைக்கப்படும் அரசியல் விளம்பர பேனரால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் அரசியல் விளம்பர பேனரால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. பொது மக்களுக்கு இடையூறு, விபத்து, உயிரிழப்பு, அசம்பாவிதங்கள் ஏற்படும் விதமாக, பொது இடங்களில் பேனர் தட்டிகள் வைக்கக்கூடாது, மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தன. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, தற்போது பொது இடங்களில், அனைத்து வகையான விளம்பர பேனர்கள், வைக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் முக்கிய வீதிகளின் சாலையோரம் ஏராளமான அரசியல் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. பேருந்து நிலையம், மணிக்கூண்டு, காந்தி ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களால், வாகன ஓட்டிகள் கவன சிதறல் ஏற்பட்டு, விபத்தில் சிக்கும் சூழல் அதிகரித்துள்ளது. பேரூராட்சி அதிகாரிகள் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என, குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது. எனவே, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து, பேனர்களை அகற்ற, அதிகாரிகள் முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்."

Tags

Next Story