ஆத்தூர் அருகே பட்டா கேட்டு தேர்தலை புறகணிப்பதாக பேனர்

ராமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் பட்டா கேட்டு நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்து வீட்டின் முன் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 10 ஏக்கர் காலனி பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக 40 குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

தங்கள் குடியிருப்பு வீடுகளுக்கு இலவச பட்டா கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியர்,ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பத்து ஏக்கர் காலனி பகுதி குடியிருப்பு வீட்டு முன் கருப்புக் கொடி கட்டியும் ஊரின் நுழைவாயில் பேனர் வைத்தும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக 50 க்கும் மேற்பட்டோர் இலவச பட்டா கேட்டு கோஷங்கல் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடுகளில் கருப்பு கொடி கட்டி பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story