பனியன் பேக்டரி லேபர் யூனியன் சங்க பொதுக்குழு கூட்டம்!
திருப்பூர்,ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்ட அலுவலகத்தில் பனியன் பேக்டரி லேபர் யூனியன் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்ட அலுவலகத்தில் ஏஐடியுசி பனியன் ஃபேக்டர் லேபர் யூனியன் சங்கப் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் துணைத் தலைவர் ரவி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் , உறுப்பினர் அதிகப்படுத்துதல் , கிளை அமைத்தல் உள்ளிட்டவை குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் சேகர் மற்றும் பொருளாளர் செல்வராஜ் உரையாற்றினார்கள். தொடர்ந்து இந்த பொதுக்குழுவில் , தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் தேர்தலுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கொண்டாடப்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனை இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் உள்ளது.
இதனால் தொழிலாளர்கள் மருத்துவ தேவைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சிரமம் உள்ளது. எனவே விரைந்து மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். திருப்பூரில் உள்ள பின்லாடை நிறுவனங்களில் 1948 தொழிற்சாலை சட்டம் 1938 வேலை அளிப்போர் கடமை சட்டங்கள் முழுமையாக அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை இஎஸ்ஐ பிஎப் பிடித்தம் செய்யாமல் உள்ள தொழிற்சாலைகள் மீது சட்டபடியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர்களுக்கான வீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.