பனியன் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம்!

பனியன் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம்!

திருப்பூர், காந்தி நகரில் உள்ள மதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் பனியன் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர், காந்தி நகரில் உள்ள மதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் பனியன் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் அவினாசி ரோடு, காந்திநகரில் உள்ள ம.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பனியன் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் க.சக்திவேல், மாநகர் மாவட்ட துணை செயலாளர் பூபதி, மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் கெச்சப்பன், அவினாசி பெருமாள், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story