மதுரையில் ஜனவரி 27-ல் வழக்கறிஞர்கள் சங்க மாநாடு

X
வழக்கறிஞர்கள் சங்க மாநில பொதுக்கூட்டம்
சிவகங்கையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில பொதுக்கூட்டம் மாநில துணைத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மதி வரவேற்றார். மாவட்ட பொது செயலாளர் சிவக்குமார் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார் தெரிவிக்கையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக வேண்டும். இதை வலியுறுத்தி 2024 ஜனவரி 27-ல் மதுரையில் சிறப்பு மாநாடு நடத்த உள்ளோம். நீதிமன்றங்களில் 'இ-பைலிங்' கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தொடர்ந்து வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த வழக்கறிஞர்களை மாநில குழு பாராட்டுகிறது. நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் இவ்வாறு தெரிவித்தார்
Next Story
