பரமத்தி வேலூரில் கொப்பரை தேங்காய் ரூ.10 லட்சத்திற்கு ஏலம்

பரமத்தி வேலூரில் கொப்பரை தேங்காய் ரூ.10 லட்சத்திற்கு ஏலம்
கொப்பரை தேங்காய் 
பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் கொப்பரை தேங்காய் ரூ.10 லட்சத்திற்கு ஏலம் போனது.

பரமத்திவேலூர், பொத்தனூர், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது. பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில்,

உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏலம் நடைபெறவில்லை. நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு ‌11 ஆயிரத்து ‌‌480 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.92.81-க்கும், குறைந்த பட்சமாக ரூ.88.99-க்கும், சராசரியாக ரூ.90.99-க்கும் ஏலம் போனது.

இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ரூ. 76.77- க்கும், குறைந்த பட்சமாக ரூ. 68.39-க்கும், சராசரியாக ரூ.72.39- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்து 692 க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags

Next Story