பசவேஷ்வரர் கோவில் கும்பாபிஷேகம் - எம்.எல்.ஏ பங்கேற்பு

பசவேஷ்வரர் கோவில் கும்பாபிஷேகம் -  எம்.எல்.ஏ  பங்கேற்பு
எம்.எல்.ஏ  ராமச்சந்திரனுக்கு வரவேற்பு 
தளி அருகே பசவேஷ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் எம்.எல்.ஏ இராமச்சந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள உனிசேநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட உனிசேநத்தம் கிராமத்தில் ஸ்ரீ பசவேஷ்வர சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா. அதிகாலை முதலே கலசங்கள் வைத்து யாகசாலை பூஜைகள் தொடக்கப்பட்டு விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமியை அலங்கரிக்கப்பட்டு கோயில் உச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்தை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். ஊர் பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் ஆசி பெற்று சென்றனர்.

Tags

Next Story