ரூ.3 கோடியில் அடிப்படை வசதிகள் - மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் முடிவு

ரூ.3 கோடியில் அடிப்படை வசதிகள் - மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் முடிவு

ஊராட்சி குழு கூட்டம் 

சேலத்தில் ரூ.3 கோடியில் அடிப்படை வசதிகள் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் தலைவர் ரேவதி ராஜசேகரன் தலைமையில் நடந்தது. மாவட்ட ஊராட்சி செயலாளர் அருளாளன், துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அவற்றை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

இதற்கு பதில் அளித்து தலைவர் ரேவதி ராஜசேகரன் பேசும்போது, மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய், மழைநீர் கால்வாய் அமைப்பது எனவும், மாவட்டம் முழுவதும் உள்ள 1,275 அங்கன்வாடி மையங்களில் பெரும்பாலான மையங்கள் பழுதடைந்துள்ளதால் அதனை புதுப்பிப்பது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போல் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கும் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story