அடிப்படை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி அறிவியல் நூல் வெளியீடு

அடிப்படை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி அறிவியல்  நூல் வெளியீடு
நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சி முறை "அறிவியல் வெளியீடு மற்றும் காப்புரிமை” ஆகியவற்றின் நுணுக்கங்கள் பற்றிய பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில், பல்கலைக்கழக இயக்குனர் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் வெளியீட்டு மையத்தின் பேராசிரியர் பாலகுமார் பிச்சை தொகுத்த “அடிப்படை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி அறிவியல் " வெளியீட்டின் தன்மையை விளக்கும் உலகளாவிய புத்தகம் வெளியிடப்பட்டது. பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் பெற்றுக் கொண்டு, இப்புத்தகத்தினை பல்கலைக்கழக அர்ஜுன்சிங் நூலகத்திற்கும் மற்றும் சென்னை பெரியார் திடல் நூலகத்திற்கும் வழங்கினார். இந்த உலகளாவிய புத்தகத்தை பல்கலைக்கழக பேராசிரியர் பாலகுமார் பிச்சை மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கௌரா ஜெகதீஸ் மற்றும் பார்சுனேட்டோ செனோட்டார் ஆகியோர் இணைந்து தொகுத்துள்ளனர். இதனை பன்னாட்டு பதிப்பகமான, ஸ்பிரிங்கர் நேச்சர் சிங்கப்பூர் இந்த புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story