சேலம் மத்திய சிறையில் அடிப்படை மதிப்பீட்டு தேர்வு

சேலம் மத்திய சிறையில் அடிப்படை மதிப்பீட்டு தேர்வு

தேர்வு எழுதிய கைதிகள் 

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட சிறைவாசிகளுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வை சேலம் மத்திய சிறையில் 221 கைதிகள் எழுதினர்.

சேலம் மத்திய சிறையில் அடிப்படை மதிப்பீட்டு தேர்வை 221 கைதிகள் எழுதினர். சேலம் மத்திய சிறையில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்கத்தின் கீழ் முற்றிலும் எழுத படிக்க தெரியாத 195 ஆண், 26 பெண் என மொத்தம் 221 கைதிகளுக்கு 11 தன்னார்வலர்களை கொண்டு 6 மாதம் எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அந்த கைதிகளுக்கு அடிப்படை மதிப்பீட்டு தேர்வு நேற்று சிறை வளாகத்தில் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது. தேர்வை 221 கைதிகள் எழுதினர். சிறை சூப்பிரண்டு வினோத் தேர்வு பொறுப்பு அலுவலராக செயல்பட்டார். இந்த தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், உதவி திட்ட அலுவலர் மாரியப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஸ்வரி மற்றும் பலர் பார்வையிட்டனர். வினாத்தாள்கள் திருத்தும் பணி முடிக்கப்பட்டு தேர்வில் வெற்றி பெறும் கைதிகளுக்கு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story