கன்னியாகுமரியில் சபரிமலை சீசனையொட்டி அடிப்படை வசதிகள்

கன்னியாகுமரியில் சபரிமலை சீசனையொட்டி  அடிப்படை வசதிகள்

பேரூராட்சி கூட்டம் 

கன்னியாகுமரி பேரூராட்சி கூட்டத்தில் சபரிமலை சீசனையொட்டி அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அவைக்கூடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணை தலைவி ஜெனஸ் மைக்கேல், வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கன்னியா குமரியில் மெயின் சீசன் காலமான சபரிமலை அய்யப்பன் சீசன் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வரை 3 மாத காலம் அமலில் இருக்கும். இந்த சீசன் காலத்தை யொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணி களுக்கு குடிநீர், சாலை, மின்விளக்கு சுகாதாரம், கழிப்பிடம் மற்றும் வாகன பார்க்கிங் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த சீசன் காலங்களில் கன்னியா குமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை சிலுவைநகர் வழியாக கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற் கரை பகுதியில் உள்ள பயோ மைனிங் பகுதியில் நிறுத்து வதற்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்த காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளி லும் ரூ.5 கோடி செலவில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்ப ணிகளை மேற்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

Tags

Next Story